உலக செய்திகள் செய்திகள் சீன அதிபருடன் நல்ல பழக்கம் இருக்கு…டொனால்டு ட்ரம்ப்…. Sathya Deva21 July 20240106 views அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியில் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி அதன் பின் உயிர் பெற்றார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மிக்சிகனில் உள்ள கிராண்ட் வீட்டில் தனது முதல் பிரச்சாரக் பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது “ஜனாதிபதியாக இருந்ததால் சீனா மீதான பொருளாதார கொள்கையைக் பற்றி விவாதித்தோம் பிறகு துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் என்ன நடந்தது என்று நலம் விசாரித்தார்” எனவும் கூறினார். மேலும் “இது குறித்து நான் அவருக்கு ஒரு அழகான கடிதம் எழுதினேன் என்றும் ஜனாதிபதி ஜி ஜின் பிங்குடன் மிகவும் நன்றாக பழகினேன்” என்றும் கூறினார்.