ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து சிம்மம் ராசிக்கு…! மனக்கவலை நீங்கி மனமகிழ்ச்சி உண்டாகும்…! புதிய பதவி அந்தஸ்து உயரும்…!! Rugaiya beevi21 August 2024076 views சிம்மம் ராசி அன்பர்களே…! மனக்கசப்பு இல்லாமல் அடுத்தவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் பணவிரயம் கொஞ்சம் ஏற்படும். உத்தியோக காரணமாக உணவு அருந்த தாமதம் ஏற்படும். எடக்கு மொடக்காக பேசாமல் நாவடக்கம் வேண்டும். வியாபார போட்டிகள் குறைந்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும் நாளாக இருக்கும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். கலைத்துறைகளில் உற்சாகமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய பதவி பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறி செல்வீர்கள். உழைப்பால் உயர்வீர்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டாம். பணவிரயம் செய்ய வேண்டாம். மாந்திரீகம் தாந்திரீகம் போன்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். பெண்கள் சுய கவுரவத்தை பாதுகாப்பீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். கூட்டு முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். தோழிகளுடன் சிரித்து பேசி மகிழ்வீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது நேரம் செலவிட வேண்டாம். தன்னால் காதல் கைகூடும். மாணவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது கவனம் வேண்டும். கல்வியல் சாதிக்கும் அமைப்பு இருக்கிறது. உயர்கல்வி சிறப்பாக அமையும். மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.