உலக செய்திகள் செய்திகள் சின்சினாட்டி டென்னிஸ் தொடர்…ஜப்பானின் நவாமி ஒசாகா தோல்வி Sathya Deva15 August 2024076 views அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் நவாமி ஒசாகா, அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார். இந்தப் போட்டியில் ஆஷ்லின் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜப்பானின் நவாமி ஒசாகா சின்சினாட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.