செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்திகள் சிக்கன் பப்சில் எலியா…?அதிர்ந்த பொதுமக்கள்…!! Inza Dev8 July 2024094 views இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவுகளின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். ரயில்களில் பயணிக்கும் போது பொதுமக்கள் IRCDC தயாரிக்கும் உணவுகளையும் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுகளில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ரயில் நிலையத்தில் கடை ஒன்று சிக்கன் பப்ஸுகளை பெட்டிக்குள் அடுக்கி வைத்துள்ளார். அந்த பெட்டிக்குள் எலி ஒன்று உயிருடன் உள்ள இருந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களின் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இதனை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் .