செய்திகள் மாநில செய்திகள் சலவை தொழிலாளியின் மகள்…. மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்…!!! Sathya Deva28 July 20240106 views உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தீபாலி கனோஜ்யா. இவரது தந்தை ஒரு சலவை தொழிலாளி. இவரின் தந்தைக்கு கால் அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். இதனால் தனது தாய்க்கு உதவிட டியூஷன் நடத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இவர் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார். அப்போது அமெரிக்கா வெளியுறவுத்துறை நிதி உதவியால் அந்நாட்டின் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் ஆகஸ்ட் 19 அன்று தீபாலி அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில் இந்தியாவின் இருந்து வரும் 30 மாணவர்களின் நானும் ஒருவர் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் எனது ஆசிரியரிடமிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் எனது படிப்பிற்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து விட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து தீபாலி தாயார் பேசுகையில் என் மகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.