20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு கொரோனா தொற்று பரவலால்….! தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி ஒத்திவைப்பு…!!! dailytamilvision.com17 April 20240168 views தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,5 வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . 8அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் சேலம் ,திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளரான ராமசாமி தெரிவித்துள்ளார்.