செய்திகள் மாநில செய்திகள் கேரள மாநிலம்…காரின் லோகோவை பார்த்து பெயர் கூறி மாணவன் உலக சாதனை …!!! Sathya Deva23 August 2024072 views கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான். சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக ‘டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.