உலக செய்திகள் செய்திகள் குவாரியில் 40-க்கும் அதிக சடலங்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. குற்றவாளி கொடுத்த வாக்குமூலம்….!! Sathya Deva16 July 20240127 views கென்யாவில் உபயோகப்படுத்தப்படாத குவாரி ஒன்று உள்ளது. அந்த குவாரியில் உள்ள குப்பை கிடங்கில் சடலங்கள் இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ்சார் அருகில் இருந்த ஜோமைசி கலிசியா என்பவரின் வீட்டை சோதனை செய்யும் போது 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டை, பெண்களின் ஆடை, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் இருந்துள்ளது . மேலும் உடல்களை அப்புறப்படுத்திய 9 சாக்குகளையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். இது குறித்து முதல் கட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை முதலில் கொலை செய்ததாகவும் அடுத்ததாக 42 பெண்களை கொன்று குப்பை கிடங்கில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் .