தென்காசி மாவட்ட செய்திகள் குண்டும் குழியுமாக உள்ள சாலை.. கடும் அவதி.. மக்கள் கோரிக்கை.! dailytamilvision.com17 April 2024094 views தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையிலிருத்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதுமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல மிகவும் அவதி அடைகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்ததன் காரணமாக மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிளில் இருந்து தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றார்கள். ஆகையால் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.