செய்திகள் மாநில செய்திகள் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடணும்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!! Inza Dev11 July 2024099 views பெங்களூரில் உள்ள சிக்பள்ளபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா .இவர் பெங்களூரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் ரக்ஷிதா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாட நினைத்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் அவர் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ரக்ஷிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். கார் ஓட்டுநரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.