சினிமா செய்திகள் தமிழ் சினிமா கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”… வெளியான புதிய பாடல்… இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu30 July 20240159 views தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் தற்போது ”ரகு தாத்தா” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷான் ரால்டன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று டீசர் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடலான `ஏக் காவ் மே’ பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. பாக்யம் சங்கர் எழுதியுள்ள இந்த பாடலை கானா விமலா பாடியுள்ளார்.