திருநெல்வேலி மாவட்ட செய்திகள் கால்நடை மருந்தக தொடக்க விழா.. அமைச்சர் தொடங்கி வைப்பு.! dailytamilvision.com17 April 20240119 views தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தண்டார்மடம் அருகே இருக்கும் போலையர் புரம் கிராமத்தில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்தை தரம் உயர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கமங்கலத்தில் தொடங்கி வைத்தார். இதை அடுத்து பாளையர் புரத்தில் கால்நடை மருந்தகம் தொடக்க விழாவிற்கு கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்க பள்ளி தலைமை ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் போலையர் புரம் பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் பலர் பங்கேற்றார்கள்.