செய்திகள் மாநில செய்திகள் காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் நீக்கம்…போலீசாருக்கு குவியும் பாராட்டு…!!! Sathya Deva28 July 2024079 views கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர். கொல்கத்தாவில் ஒருவர் காருக்கு பின்னால் BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதி உள்ளனர் அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் ஒரு பெண்ணை நம்பாதே என்று எழுதி இருந்தது. அந்த காரில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை எதார்த்தமாக பார்த்த போலீசார் கார் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் பக்குவமாக பேசி ஸ்டிக்கரை அகற்ற வைத்துள்ளார். பொதுவெளியில் இது போன்ற வாசகத்தை வெளிப்படையாக பதிவிடுவது சட்டப்படி குற்றம் என கொல்கத்தா போலீசார் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரின் செயலை குறித்து பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நமது ஊர்களின் இதைப் போன்ற வாசகங்கள் இருந்தால் அதை தமிழ்நாடு போலீசார் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.