செய்திகள் மாநில செய்திகள் காதியின் விற்பனை உயர்வு… பிரதமர் நரேந்திர மோடி…!!! Sathya Deva28 July 20240109 views பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவரது 112 வது நிகழ்ச்சி அன்று மோடி அவர்கள் பேசுகையில் காதி கிராமோத் யோக்கின் வர்த்தகம் முதல் முறையாக ரூபாய் 1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த காதி விற்பனை 400 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் அதிகரித்து வரும் காதி மற்றும் கைத்தறி விற்பனைகளால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இந்த தொழில்களை பெண்கள் அதிகமாக செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார். நீங்கள் பல்வேறு வகையான ஆடைகளை வைத்திருக்கலாம் ஆனால் இதுவரை காதி வாங்கவில்லை என்றால் வாங்குகள் என்றும் கூறியுள்ளார்.