செய்திகள் மாநில செய்திகள் கர்நாடக மாநில ஆசிரமத்தில்….சிறுவனை பிச்சை எடுக்க வைத்த பொறுப்பாளர்….!!! Sathya Deva5 August 2024078 views கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தருண் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவனது அண்ணன் அருண் அங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தருண் பேனாவை திருடியதாக சக மாணவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் ஆசிரம பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் அவரது சகாக்கள் சிறுவனின் கை கால்களை கட்டி 3 நாட்களாக அறையில் பூட்டி வைத்து விறகு கட்டையாளும் கிரிக்கெட் பேட்டாலும் அடித்துள்ளனர். பின்பு யாக்திர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர். என்று அந்த சிறுவன் கூறினார். இந்நிலையில் சிறுவனின் தாய் மகனை பார்க்க பள்ளிக்கு வந்தபோது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் நடந்ததை தாயிடம் கூறினார். கண் கலங்கிய நிலையில் தனது மகனை பார்த்து அவர் நிலை குழைந்து போனார். குழந்தைகள் நல செயல்பாட்டாளர் மூலம் சிறுவன் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.