கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு…பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

கர்நாடக அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காவேரி கரையோர தாழ்வான பகுதிகளின் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபடுகிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது எனவும் கூறப்படுகிறது. காலை 1 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.40 லட்சம் அதிகரித்து உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!