“கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடந்துட்டு இருக்கு”…. பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி ஸ்பீச்….!!!!

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும் பொதுவெளியில் பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது எனவும் அதிமுக அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி கூறியுள்ளார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து ரவி பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அதோடு கட்சியை பலப்படுத்துவது என்பது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!