செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் கடும் பனிப்பொழிவு… புகைமண்டலமாக காட்சியளிக்கும் ஏற்காடு… இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!! Revathy Anish26 June 20240113 views தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டாட பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு வீசி வருகிறது. அதிக அளவில் பனி பொழிவதால் காலை 9 மணி வரையிலும் அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் எச்சரிக்கைக்காக வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணம் செய்கின்றனர். மேலும் தொடர் மழையால் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.