உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் ஹாக்கி…தங்கம் வென்ற நெதர்லாந்து…!!! Sathya Deva9 August 2024087 views ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஹாக்கியில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனியும் நெதர்லாந்து மோதினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை வகித்தனர். இதை அடுத்து வெற்றியை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளி பதக்கம் வென்றது. நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.