உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டி…லக்ஷயா சென் முன்னிலை….!!! Sathya Deva31 July 2024084 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலின் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் -சரப் ஜோத்சிங் ஜோடி வெண்கலம் பெற்றது. இந்த நிலையில் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் இந்தோனேசியாவின் ஜோனாதன் கிரிஸ்டியுடன் மோதினார். தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென் அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அவர் தொடர்ந்து முன்னிலை பெற்றார் என கூறப்படுகிறது. இறுதியில் 21- 18, 21- 12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.