செய்திகள் மாநில செய்திகள் எப்போ திருமணம்?என்று கேட்ட முதியவரை…. மரக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது…!!! Sathya Deva4 August 2024093 views இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் 45 வயது கொண்ட சிரேகர் என்பவர் வசித்து வந்தார். அப்போது முதியவர் அவர் மீது அக்கறையில் அவரை பார்க்கும் போதெல்லாம் எப்போ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? 40 வயது ஆகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்பதே வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ஆம் தேதி திங்கள்கிழமை என்று முதியவரின் வீட்டில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். அவர் மனைவியின் முன்னிலையிலே மரக்கட்டையால் கடுமையாக தாக்கினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தடுத்து நிறுத்தினார்கள். மேலும் முதியோரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்து உள்ளார். இதைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதற்கு சிரேகர் திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டு முதியோரை தாக்கியதாக வாக்குமூலம் கூறியுள்ளார்.