சினிமா செய்திகள் தமிழ் சினிமா “என்னைக்குமே ரஜினி சாரோட போட்டி போட நினைச்சதில்லை”… சிறுத்தை சிவா ஓபன் டாக்…!!! Inza Dev11 July 2024084 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது ”கங்குவா”திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணலில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தோடு கங்குவா திரைப்படம் போட்டியிட போகிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிவா, முதலில் கங்குவா திரைப்படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது வேறு எந்த படமும் ரிலீசாவதாக பதிவு செய்யவில்லை. தொழில் ரீதியாகவும், மனரீதியாவும் சரி, நான் என்றுமே ரஜினி சாருடன் போட்டியிட வேண்டும் என நினைத்தது கிடையாது என அவர் கூறினார்.