உலக செய்திகள் செய்திகள் ஊருக்குள் புகுந்துள்ள யானைகள்…பலத்த காயமடைந்து பெண் யானை பலி…!!! Sathya Deva19 August 20240148 views மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்குள்ள சுற்றுச்சுவர்களை இடித்து சேதப்படுத்தினர். இதனால் மக்கள் யானையை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர். அந்த யானைகள் ஊரில் இருந்தவர்களை தாக்க முயன்றது. அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் இதற்கு பலியானார் என கூறப்படுகிறது. யானை கூட்டத்தை விரட்ட ஹீல்லா அணியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தீபந்தங்களை யானைகள் மீது எறிந்து விரட்டி அடித்தனர். இந்நிலையில் கூர்மையான ஆயுதம் தாக்கி ஒரு பெண் யானை பலத்த காயமடைந்து நடக்க முடியாமல் தவித்தது. அந்த யானை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் யானை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியதாக இருக்கிறது.