சினிமா செய்திகள் தமிழ் சினிமா உயிரிழந்த ஏழுமலைக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி… வெளியான புகைப்படம்…!!! Sowmiya Balu18 July 2024087 views தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த 2022 ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசயமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடைபெற்று வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞரான ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் கார்த்தி இவரின் உடலுக்கு நேரில் சென்று கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.