செய்திகள் மாநில செய்திகள் உத்தரபிரதேச மாநிலம்….நர்ஸ் பாலியல் வன்முறையால் படுகொலை…!!! Sathya Deva16 August 2024094 views உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் திப்திபா கிராமத்தை சேர்ந்த 30 வயதான நர்சு ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார் என கூறப்படுகிறது. நர்ஸ் கடந்த 30-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தார். அதன் பின்பு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடந்த 30-ந் தேதி நர்சு ஆஸ்பத்திரியில் பணி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற போது தர்மேந்திரகுமார் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் நர்சை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று கற்பழித்த அவர் நர்சின் கைக்குட்டையாலேயே மூச்சு திணற செய்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. பின்பு கைதான தர்மேந்திரகுமார் போதைக்கு அடிமையானவர் என்றும் அவர் நர்சை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.