உலக செய்திகள் செய்திகள் இஸ்ரவேல் மற்றும் காசா இடையிலான போர்…30 பேர் பலி….!!! Sathya Deva29 July 20240105 views இஸ்ரவேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரவேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டன என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மத்திய காசாவில் டெய்ர் எர்- பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 30 பேர் பலியாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரவேல் பிரதமர் அமெரிக்கா சென்று உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.