சினிமா செய்திகள் தமிழ் சினிமா “இவன் தந்திரன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா…. இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu14 July 20240115 views தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இவன் தந்திரன். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏழு வருடங்களுக்குப் பின் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மசாலா பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் சரண் நாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.