இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு…நிர்மலா சீதாராமன்…!!!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடபெறும் என்று கூறப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக 2024 -2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் முக்கிய அம்சங்களை கூறியுள்ளார். பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன், கல்வியை வழங்க ரூபாய் 1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 4 கோடி பேருக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கும் திட்டம், வேளாண்மை துறைக்கு 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் 9 வகையான முன்னுரிமைகள் அடையாளம் காணப்படுகிறது. கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்யத் திட்டம், பருவநிலையை தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது.மேலும் ஒரு கோடி பேரை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!