உலக செய்திகள் செய்திகள் இலங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த இலியாஸ்….மாரடைப்பால் உயிரிழந்ததார்…!!! Sathya Deva23 August 2024076 views இலங்கையில் அடுத்த மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் 39 பேரில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சுயட் சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திடீரென இவருக்கு இவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலே இலியாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பியாக செயல்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.