உலக செய்திகள் செய்திகள் இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரா…? மனோலோ மார்க் நியமனம்…!!! Sathya Deva22 July 20240109 views உலகக்கோப்பை தகுதி சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது சுற்றுக்கு வர தவறியது என கூறப்படுகிறது. இதில் கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்திய அணியை தோல்வி பெற செய்தது. இதனால் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க் என்பவரை நியமனம் செய்ய அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டது. இவர் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.