செய்திகள் மாநில செய்திகள் ஆர்டர் செய்த உணவு ஏன் வரவில்லை என்று கேட்ட வாடிக்கையாளர்… கபாப் கம்பியால் குத்திய உரிமையாளர்…!!! Sathya Deva30 August 20240127 views டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்த உணவு ஏன் வரவில்லை என்று கேட்ட வாடிக்கையாளரை உணவக முதலாளி கபாப் செய்யும் கம்பியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் காலையில் தெருவோர தாபாவில் 29 வயதான ஹர்னீத் சிங் என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அரை மணி நேரமாகியும் ஆர்டர் வராததால் பொறுமையிழந்த ஹர்னீத் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகவலறிந்து தனதுமகனுடன் அங்கு வந்த கடை உரிமையாளர் ஊழியர்களுடன் சேர்ந்து ஹர்னீத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும் கடையில் கபாப் செய்ய வைத்திருந்த கம்பியை எடுத்து கடை உரிமையாளர் ஹர்னீத்தை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஹர்னீத் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.