செய்திகள் மாநில செய்திகள் ஆம் ஆத்மி கட்சி எம்பி தாக்குதல்…. ஜாமீன் மனு தள்ளுபடி….! Sathya Deva13 July 2024098 views புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதிமலிவால் அவர்களை பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. அப்போது குமார் தன்மீது வந்த குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் காவல்துறை விசாரணை முடிந்து விட்டதால் என்னை காவலில் வைக்க தேவையில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த பொழுது இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான போதுமான காரணம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.