செய்திகள் மாநில செய்திகள் ஆப்பிரிக்க நாட்டில் நிலச்சரிவு…229பேர் பலி …!! Sathya Deva24 July 20240135 views ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்கு நிலச்சரிவும் மற்றும் மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவில் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்க மீட்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது பலர் பலியாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 157 பேர் பலியான நிலையில் அதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. இந்த இடுப்பாடுகளில் இருந்து சில பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.