செய்திகள் மாநில செய்திகள் ஆந்திரா மாநிலம்…ஜிமிக்கி போட்டு சிங்காரித்து சேவல் காணிக்கை…!!! Sathya Deva13 August 20240108 views ஆந்திரா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்திரம் பகுதியில் பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவர் சேவல் ஒன்றை கோவிலுக்கு கொண்டு வந்திருந்தார். அந்த சேவலுக்கு ஜிமிக்கி போட்டு சிங்காரித்திருந்தார். இறக்கைகளை வண்ணம் தீட்டி அலங்கரித்து பூ சூட்டி கொண்டு வந்திருந்தார். அலங்கரிக்கப்பட்ட சேவலை கோவிலில் காணிக்கையாக அளித்தார். இதனை கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி வேண்டுதலை நிறைவேற்றினேன் என அவர் தெரிவித்தார்.