செய்திகள் மாநில செய்திகள் ஆந்திராவில் கனமழை… முன்னேச்சரிக்கை நடவடிக்கை…!!! Sathya Deva24 July 20240116 views ஆந்திரா பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பத்ராசலம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும் என நிர்வாகி முனுசாமி கூறியுள்ளார். இதனால் அந்த பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மீட்பு துறையினர் கூறியுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் வெள்ள நீர் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டும் இதே போன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மழைக்கால நோயிலிருந்து மக்களை காப்பாற்றி சுகாதாரா துறையும், மரங்கள் விழுந்தால் அவற்றை நீக்க நீப்பு துறையிலும் தயராகயுள்ளதாக நிர்வாக அதிகாரி முனிசாமி தெரிவித்துள்ளார்.