செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் ஆடிக் கடல் தேடி குளி…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கடல் குளிப்பு கொண்டாட்டம்….!! Inza Dev12 July 2024089 views ஆடிக் கடல் தேடி குளி என்பது தென் மாவட்டங்களில் சொல் வழக்கமாகும். அதன்படி ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாகவும் கூடங்குளம் அன்னம்மாள் மாதா ஆலய எட்டாம் திருவிழாவை முன்னிட்டும் கூடங்குளம் மற்றும் சுற்றும் வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அணுமின் நிலையம் அருகே இருக்கும் கடலில் நீராடி மகிழ்ந்தனர். வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து உண்டதோடு கடற்கரை மணலில் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.