செய்திகள் மாநில செய்திகள் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார்-பஸ் மோதியது…7 பேர் பலி….!!! Sathya Deva4 August 2024073 views உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலை ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு வந்த கார் திடீரென்று தவறான பாதையில் வந்துள்ளது. இதனால் கார் மீது பஸ் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பேரும் காரில் பயணம் செய்த 3 பேரும் பலியானார்கள். மேலும் 25 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.