உலக செய்திகள் செய்திகள் அறுவை சிகிச்சை வீடியோ வெளியானது … பெண் அதிர்ச்சி…!!! Sathya Deva21 July 20240112 views சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண் தனது மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதில் கோவாவின் முகம் தெளிவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த கோவா மிகவும் அதிர்ச்சடைந்து உள்ளார். தன்னுடைய தனி உரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறி உள்ளதாக கூறினார். அந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டார். மேலும் மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த கோரிக்கையை மருத்துவமனை மறுத்துவிட்டது. மருத்துவமனை நிர்வாகம் நாங்கள் இந்த வீடியோவை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். மருத்துவமனையில் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் செய்துள்ளார். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை அடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாக அவர் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லை என்று கூறி கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் தன் தவறை ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.