உலக செய்திகள் செய்திகள் அர்ஷத் நதீம்-முகமது ஹாரிஸ் தார் சந்திப்பு…வைரல் வீடியோ…!!! Sathya Deva14 August 2024080 views பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.https://twitter.com/nabilajamal_/status/1823295817731485951? மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.