செய்திகள் மாநில செய்திகள் அரியானா மாநிலத்தில் சாலை விபத்து…8 பேர் பலி…!!! Sathya Deva4 September 20240103 views அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிதாரனா கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.