உலக செய்திகள் செய்திகள் அரசு வேலை வேண்டாம்… பிரப்ஜோத் சிங் அதிரடி…!!! Sathya Deva12 August 20240110 views ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், மனு பாக்கர் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரப்ஜோத் சிங்குக்கு அரியானா மாநில அரசு விளையாட்டு துறையில் துணை இயக்குனர் பதவி கொடுக்க முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க சரப்ஜோத் சிங் மறுத்து விட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘வேலை என்பது நல்லது தான். ஆனால் அதனை இப்போது நான் செய்ய மாட்டேன். முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட விரும்புகிறேன்’ என்று கூறினார்.