மாவட்ட செய்திகள் விருதுநகர் அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு… விருதுநகரில் பெரும் பரபரப்பு!! dailytamilvision.com17 April 20240158 views விருதுநகருக்கு அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கரைத்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.