சினிமா செய்திகள் தமிழ் சினிமா அந்த மாதிரி ரோலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்…!!! Sowmiya Balu18 July 20240101 views நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் கிளாமர் காட்ட தொடங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். இதனைத்தொடர்ந்து, சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட இவர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ”நான் அதை தேர்வு செய்யவில்லை .காரணம், என்னைப் பொறுத்தவரை எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் .எனவும் குடும்பங்களை மகிழ்வித்து வகையிலும் இருக்க வேண்டும்” என இவர் கூறியுள்ளார்.