பல்சுவை வர்த்தகம் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!! dailytamilvision.com17 April 20240332 views சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5505 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,040 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4509 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37,072 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,600 ஆகவும் இருக்கிறது.