அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு இவர் ஆதரவா..? வெளியிட்ட பதிவு…!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். மேலும் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த பலரும் போர் கொடி தூக்கினர் இதனால் இந்த போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதை எடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அவரும் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் பாரக் ஒபமா இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் இந்த வாரம் நானும் மிச்சலும் எங்களது நண்பர் கமலா ஹாரிஸ் உடன் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அமெரிக்காவில் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார் என்றும் என் முழு ஆதரவை கமலா ஹாரிஸ்க்கு வழங்குகிறோம் என்று கூறியுள்ளார். ஜன நாயக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் எனவும் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வோம் என்றும் கூறியுள்ளார். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!