உலக செய்திகள் செய்திகள் அதிபர் அலுவலகத்தில் குப்பை நிறைந்த பலூன்…தென்கொரியா கடும் கண்டனம்….!!! Sathya Deva24 July 2024070 views தென் கொரியா தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாயின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தென் கொரியா- வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகின்றது என கூறப்பிடப்படுகிறது. இதற்கிடையே நீண்ட நாட்களாக வடகொரியா ராட்சத பலூன்களின் குப்பைகளை நிரப்பி அதனை தென் கொரியாவுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் குப்பை நிறைந்த பலூன் ஒன்று தென்கொரியாவில் உள்ள அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்தது. இன்று காலை எல்லை தாண்டி தலைநகர் சியாளலுக்கு வடக்கே பறந்தன. அந்த பலூன்கள் தென்கொரியாவின் அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.