கடலூர் மாவட்ட செய்திகள் அதிகரிக்கும் டெங்கு பரவல்… ஒரே வாரத்தில் 36 பேருக்கு காய்ச்சல் உறுதி… அச்சத்தில் பொதுமக்கள்…!!! dailytamilvision.com17 April 2024099 views கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே வாரத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த வாரத்தில் 6 என்ற எண்ணிக்கையில் இருந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது 5 மடங்கு அதிகரித்து 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.