சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடேங்கப்பா! “இந்தியன் 2” படத்தின் மொத்த பட்ஜெட்…. இத்தனை கோடியா…? Sowmiya Balu15 July 20240106 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். இந்த திரைப்படம் ரிலீசாகி மூன்று நாட்கள் முடிவில் உலக அளவில் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.