சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! “விடுதலை” படத்தின் மூன்றாம் பாகமா? வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu24 August 20240102 views பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இசையமைத்திறந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இனைத்தொடர்ந்து, தற்போது ‘விடுதலை 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது .அதன்படி, இந்த படத்தின் ரன் டைம் 4 மணி நேரமாக இருக்கிறது எனவும், இதனால் இந்த படத்தின் மூன்றாம் பாகம் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.