சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! “பிக்பாஸ்” சீசன் 8-ல் பங்கேற்கும் பிரபல சீரியல் நடிகை… யார் தெரியுமா? Sowmiya Balu9 September 2024069 views சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் சினிமா பணிகள் காரணமாக என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கமல்ஹாசன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பிக்பாஸ் சீசன் 8ன் அடுத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி என விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டது. இந்நிலையில், இந்த சீசனில் பிரபல சீரியல் நடிகை கலந்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.